'மாவீரன்' ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்? இதுதான் காரணமா?

  • IndiaGlitz, [Thursday,May 04 2023]

சிவகார்த்திகேயன் நடித்து வரும் இரண்டு திரைப்படங்களின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அவற்றில் ஒன்றான 'மாவீரன்’ ரிலீஸ் தேதி மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்’ திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகும் என்றும் அவர் நடித்த இன்னொரு திரைப்படம் 'அயலான்’ தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் ’ஜெயிலர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ’ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் 'மாவீரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஜூலைக்கு மாற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இன்று மாலை 6 மணிக்கு ’ஜெயிலர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியானவுடன் 'மாவீரன்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் 'அயலான்’ படத்தின் ரிலீஸ் தேதியில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ள 'மாவீரன்’ படத்தில் மிஷ்கின், யோகி பாபு, சுனில் உள்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் நடிகை சரிதா ஒரு முக்கிய குணச்சித்திர கேரக்டரில் நடித்துள்ளார். தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார்.தேசிய விருது பெற்ற ’மண்டேலா’ என்ற திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில், விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

தமிழ்த் திரையுலகில் அடுத்த சோகம்… பிரபல நடன இயக்குநர் சம்பத்ராஜ் உயிரிழப்பு!

நடிகர், இயக்குநர் மனோபாலா இறந்த சோகத்தில் இருந்தே பலரும் மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது

பிறந்த நாளில் த்ரிஷாவுக்கு ஸ்பெஷல் ட்ரீட் கொடுத்த 'லியோ' படக்குழு..! வைரல் புகைப்படம்..!

 நடிகை த்ரிஷா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் த்ரிஷா பிறந்த நாளை

சொக்கத் தங்கமே… ஒரு இன்ஸ்டா புகைப்படத்திற்காக நிவேதா பெத்துராஜை கொண்டாடும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.

கர்ப்பமான வயிற்றை வீடியோ எடுத்து வெளியிட்ட இலியானா..!

நடிகை இலியானா திருமணம் செய்து கொண்டதாக இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் சமீபத்தில் அவர் கர்ப்பமானதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 

நான் இன்னும் சாகல.. திரும்பி வருவேன்.. ரசிகரின் கேள்விக்கு செல்வராகவன் பதில்..!

ரசிகரின் ட்விட் ஒன்றுக்கு பதில் அளித்த இயக்குனர் செல்வராகவன் 'நான் இன்னும் சாகவில்லை அல்லது ரிட்டயர் ஆகவில்லை, கண்டிப்பாக திரும்ப வருவேன்' என்று பதில் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.