சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' தயாரிப்பாளரின் அடுத்த படம்.. 40வது படத்தில் அடியெடுத்து வைக்கும் ஹீரோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ என்ற வெற்றி திரைப்படத்தை தயாரித்த நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் மூலம் பிரபல ஹீரோ தனது 40 வது படத்தில் அடி எடுத்து வைக்க உள்ளார்.
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான ‘மாவீரன்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியானது என்பதும் இந்த படம் ரூ.35 கோடி செலவில் உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட ரூ.90 கோடி வசூல் செய்ததாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் முதல் படம் வெற்றியை அடுத்து தற்போது ‘மாவீரன்’ படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் அடுத்த பட அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எங்கள் நிறுவனத்தின் இரண்டாவது படத்தின் அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் எங்கள் சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் அடுத்த படத்தில் நடிகர் சித்தார்த் நடிக்க உள்ளார் என்றும் இது அவரது 40வது படம் என்பதால் ’சித்தார்த் 40’ என்று தற்போது பெயரிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்க உள்ளார் என்றும் இந்த படத்தின் கதை உலகெங்கும் உள்ள இதயங்கள் எதிரொலிக்கும் வகையில் இருக்கும் என்றும் இந்த படத்தின் விவரங்களை மிக விரைவில் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் மற்ற தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
We are extremely happy to join hands with #Siddharth for our Production No.2, to be directed by @sri_sriganesh89.#Siddharth40 @iamarunviswa pic.twitter.com/TUBylI9WW8
— Shanthi Talkies (@ShanthiTalkies) May 18, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments