சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' : ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தின் வசூலும் திருப்திகரமாக இருந்ததாக திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கூறினர் என்பதையும் பார்த்தோம்.
இந்த படம் 11 நாட்களில் 75 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பதும் சிவகார்த்திகேயனின் மற்றொரு வெற்றி பெற பட்டியலில் இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்ற ‘மாவீரன்’ திரைப்படம் தற்போது அமேசான் ஓடிடியில் வெளியாக இருக்கும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமேசான் ப்ரைமில் ‘மாவீரன்’ திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி அதாவது வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து ரசிகர்கள் இந்த படத்தை ஓடிடியில் பார்க்க மிகுந்த ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், யோகி பாபு, சுனில், சரிதா, மோனிஷா உள்பட பலர் நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
watch Sathya, a timid cartoonist transform into a fearless hero and take over the world! ⚡️#MaaveeranOnPrime, Aug 11 pic.twitter.com/wgUHTaacLQ
— prime video IN (@PrimeVideoIN) August 7, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com