சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம் 2 மணி நேரம் 26 நிமிடங்கள் அதாவது 146 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனின் முந்தைய திரைப்படம் பிரின்ஸ்’ திரைப்படம் 2 மணி நேரம் 23 நிமிடங்கள் அதாவது 143 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டிருந்தது.
சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ள 'மாவீரன்’ படத்தில் மிஷ்கின், யோகி பாபு, சுனில் உள்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் நடிகை சரிதா ஒரு முக்கிய குணச்சித்திர கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி பிரபலம் மோனிஷாவும் இந்த படத்தில் நடித்துள்ளார்.
தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments