close
Choose your channels

முதல் படம் வெளியாகும் முன்னரே சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த நடிகை!

Wednesday, August 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் ஒருவரின் மகள் நடிகையாக அறிமுகமான நிலையில் அந்த படம் ரிலீஸ் ஆகும் முன்பே சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அத்திஷங்கர், நடிகர் கார்த்தியுடன் நடித்த திரைப்படம் ’விருமன்’. இந்த படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதல் படம் வெளியாகும் முன்பே சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’மாவீரன்’ என்ற படத்தில் நாயகியாக நடிக்க அதிதிஷங்கர் ஒப்பந்தமாகி உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது

’மாவீரன்’ படத்தை சமீபத்தில் தேசிய விருது பெற்ற 'மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பரத் ஷங்கர் இசையில் விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment