4 நாட்களில் 'மாவீரன்' படத்தின் வசூல் இத்தனை கோடியா? அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நான்கு நாட்களில் இந்த படம் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான ‘மாவீரன்’ திரைப்படம் நான்கு நாட்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தை திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டி குவித்தனர் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படம் ஆரம்பம் முதலே நல்ல வசூலை செய்து வந்த நிலையில் தற்போது நான்கு நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் 50 கோடி ரூபாய் வசூல் செய்ததை அடுத்து புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சிவகார்த்திகேயனின் முந்தைய படமான ’பிரின்ஸ்’ எதிர்பார்த்த வசூலை பெறாத நிலையில் அடுத்த படமே வெற்றி படமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ மற்றும் ‘டான்’ ஆகிய இரண்டு படங்களும் ரூ.100 கோடி வசூல் செய்த நிலையில் 'மாவீரன்’ படமும் ரூ.100 கோடி வசூல் என்ற சாதனையை எட்டுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ள 'மாவீரன்’ படத்தில் மிஷ்கின், யோகி பாபு, சுனில், சரிதா, மோனிஷா உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
Big thanks and Gratitude to SK fans,cinema audience and press & media for making #Maaveeran /#Mahaveerudu a BLOCKBUSTER 💥😇🙏❤️#BlockbusterMaveeran #BlockbusterMahaveerudu
— Shanthi Talkies (@ShanthiTalkies) July 18, 2023
🌟 @Siva_Kartikeyan
🎙️ @VijaySethuOffl / @RaviTeja_offl
🎬 @madonneashwin #VeerameJeyam… pic.twitter.com/IRdO8jkNQF
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments