ஜூலை 14ல் வெளியாகும் 'மாவீரன்' : அதிகாலை காட்சி உண்டா?

  • IndiaGlitz, [Saturday,July 08 2023]

சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் இந்த படத்தின் முதல் காட்சி எப்போது என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் தேசிய விருது பெற்ற ’மண்டேலா’ என்ற திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’மாவீரன்’.

இந்த படம் ஜூலை 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் சிங்கிள் பாடல் நேற்று வெளியாகி வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தமிழகத்தில் இந்த படத்தின் முதல் காட்சி காலை 8.00 மணிக்கு தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே அதிகாலை காட்சிகள் எந்த திரைப்படமும் திரையிடப்படவில்லை என்றும் குறிப்பாக சமீபத்தில் வெளியான ’மாமன்னன்’ திரைப்படம் கூட 8.00 மணி காட்சி தான் முதல் காட்சி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ள 'மாவீரன்’ படத்தில் மிஷ்கின், யோகி பாபு, சுனில், சரிதா, மோனிஷா உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.