எது பேசறதா இருந்தாலும் ஜெயிச்சுட்டு பேசு: 'கனா' டிரைலர் விமர்சனம்
- IndiaGlitz, [Sunday,November 25 2018]
சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள முதல் படமான 'கனா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
பொதுவாக தமிழ் சினிமாவில் ஸ்போர்ட்ஸ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் விரைவில் வெளியாகவுள்ள 'கனா' படம் இன்னொரு ஸ்போர்ட்ஸ் படமாக அமைந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்தது என்பதற்காக கண்ணீர் விடும் தனது தந்தையின் கண்ணீரை துடைக்க கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடும் ஒரு மகளின் 'கனவு' தான் இந்த 'கனா' படத்தின் கதை என தெரிகிறது.
ஐஸ்வர்ய ராஜேஷ், கிரிக்கெட் வீராங்கனை கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளதே இந்த படத்தின் வெற்றியை உறுதி செய்துள்ளது. அவருடன் அனுபவமுள்ள நடிகரான சத்யராஜ் இணைந்திருப்பது இந்த படத்தின் மிகப்பெரிய பலம். இயக்குனர் அருண்ராஜா காமராஜின் கதை மற்றும் நட்சத்திரங்கள் செலக்சன், திபு நிணனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவை மிக கச்சிதமாக அமைந்துள்ளதால் டிரைலரை பார்க்கும்போதே முழு படத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது.
'உன்னால முடியாதுன்னு சொன்னா நீ நம்ப வேண்டியது அவங்கள இல்ல..உன்னை,
இந்த உலகம் ஜெயிச்சுருவேன்னு சொன்ன கேட்காது, ஆனால் ஜெயிச்சவன் சொன்னா கேட்கும், எது பேசு இருந்தாலும் ஜெயிச்சுட்டு பேசு'
போன்ற வசனங்கள் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் இருக்கும் இளைஞர்களுகான உந்துதலை ஏற்படுத்தும் வசனங்கள் ஆகும்.
மொத்தத்தில் சிவகார்த்திகேயன் - அருண்ராஜா காமராஜ் டீமுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கின்றது.