'ஜெயிலர்' படத்தில் சிவகார்த்திகேயன்.. லென்ஸ் வைத்து கண்டுபிடித்த நெட்டிசன்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த ட்ரெய்லரில் சிவகார்த்திகேயன் இருப்பதை நெட்டிசன்கள் லென்ஸ் வைத்து கண்டுபிடித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான ’கோலமாவு கோகிலா’ படத்திலும் மூன்றாவது திரைப்படமான ’பீஸ்ட்’ படத்திலும் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதி இருப்பார் என்பது தெரிந்ததே. மேலும் நெல்சனின் இரண்டாவது படமான ’டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் தான் ஹீரோ என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நெல்சனுக்கு பல ஆண்டுகளாக நண்பராக இருக்கும் சிவகார்த்திகேயன் எப்படி ’ஜெயிலர்’ படத்தில் இல்லாமல் போனார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் ’ஜெயிலர்’ படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் ஒரு காட்சியில் ரஜினியும் சிவகார்த்திகேயன் அருகருகே இருக்கும் புகைப்படம் ரஜினி வீட்டில் இருக்கும் காட்சியை கண்டுபிடித்து உள்ளனர்.
எனவே கண்டிப்பாக இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கேரக்டரில் இருப்பார் என்று ரசிகர்கள் கணித்துள்ளனர். இந்த கணிப்பு சரியானதா? என்பதை ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் அன்று தெரிந்து கொள்வோம்.
How Many of You Notice This? #Sivakarthikeyan & #Thalaivar Photo frame in #JailerShowcase
— Premkumar Sundaramurthy (@Premkumar__Offl) August 3, 2023
ஒரு வேளை இருக்குமோ 😁💥🔥#Jailer #SuperstarRajinikanth #PrinceSK #Rajinikanth #JailerFromAug10 pic.twitter.com/drsPO7XrbY
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com