காமன்மேனாக இருந்தா பத்தாது, ஹீரோ வேணும்: ஹீரோ டீசர்
- IndiaGlitz, [Thursday,October 24 2019]
சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹீரோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரை முதல்முறை பார்த்தவுடனே ‘இரும்புத்திரை’ போல் ஏதோ வித்தியாசமாக இயக்குனர் சொல்ல வருகிறார் என்பது புரிய வருகிறது
’ஏ ஃபார் ஆப்பிள் என்று சொன்னால் அவன் என் புரடொக்ட், ஏ ஃபார் ஏரோபிளேன்னு சொன்னா அவர் என் காம்பிடேட்டர் என்ற முதல் வசனமே படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்கின்றது
திறமையாவது மண்ணாங்கட்டியாவது இங்க காசு இல்லைன்னா வேலைக்காவாது என்ற வசனம் எந்த அளவுக்கு நமது சமுதாயத்தில் காசுக்கு முக்கியத்துவமும் திறமைக்கு முக்கியத்துவம் இன்மையும் இருப்பது வெட்டவெளிச்சமாகிறது
நீட்ட வேண்டியதை நீட்டினால் சீட்டெல்லாம் தானா வரும் என்ற வசனம் ஊழல், லஞ்சம் எந்த அளவுக்கு கல்வித்துறையில் தலைவிரித்தாடுகிறது என்பது தெரிகிறது
நம்ம கல்வி முறையில எல்லோரும் படிக்க முடியும், ஆனால் எல்லாரும் சாதிக்க முடியாது. இந்த சிஸ்டத்தை மாற்றுவதற்கு காமன்மேன் பத்தாது, ஹீரோ வேணும் என்ற அர்ஜூனின் வசனத்தை அடுத்து சிவகார்த்திகேயன் எண்ட்ரி ஆகிறார். அவர் இந்த படத்தில் என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது
யுவன்ஷங்கர் ராஜாவின் அபாரமான பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என டிரைலரில் இருந்தே தெரியவருகிறது. மொத்தத்தில் இந்த முறை இயக்குனர் கல்வி விவகாரத்தை டெக்னாலஜி துணையுடன் கையில் எடுத்திருக்கின்றார். சுவாரஸ்யம் மற்றும் சமூக கருத்து ஆகிய இரண்டும் கலந்துள்ள படம் என்பதால் மீண்டும் அவருக்கு ஒரு வெற்றிப்படமாக இந்த படம் இருக்கும் என கருதப்படுகிறது