இந்த பயணம் இனிமையானது: சிவகார்த்திகேயன் பட இயக்குனர் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்து வந்த ’ஹீரோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து விட்டதாக இயக்குநர் பிஎஸ் மித்ரன் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
’ஹீரோ’ படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்துவிட்டது. ஒரு இனிமையான அனுபவம். இந்த படத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் அனைவரும் ஓய்வு இன்றி தங்களது உழைப்பை கொட்டியதால் தான் ஒரு அருமையான திரைப்படம் உருவாகி உள்ளது. குறிப்பாக கடைசி கட்ட படப்பிடிப்பில் அனைத்து தொழிலாளர்களும் மிகவும் ஈடுபாட்டுடன் பணிபுரிந்தனர். அவர்கள் எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
'ஹீரோ' திரைப்படத்தை வரும் டிசம்பர் 20-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பெருவிழா விருந்தாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதால் இன்னும் ஒரே மாதத்தில் போஸ்ட்புரொடக்ஷன் பணியை முடிக்க வேண்டிய நிலையில் படகுழுவினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த படம் தொடங்கப்பட்ட நேரத்தில் இருந்தே சில போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வந்ததால் மீதியுள்ள பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் முடிந்து விடும் என்றே படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பிஎஸ் மித்ரன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, ஷ்யாம் கிருஷ்ணன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Hero shoot wrapped up today!
— PS Mithran (@Psmithran) November 24, 2019
What a wild ride this has been!
Big thank you to all of my technicians who worked tirelessly throughout this wonderful schedule.@george_dop ??@dhilipaction ??@dancersatz ??@InfinitMaze ??@Pallavi_offl ??
Gearing up for #PostProduction pic.twitter.com/HApS1eJYSE
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout