சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தின் மலைக்க வைக்கும் ரன்னிங் டைம்!

  • IndiaGlitz, [Sunday,December 15 2019]

ஒரு காலத்தில் தமிழ் திரைப்படங்கள் மூன்று மணி நேரத்திற்கு குறையாமல் வெளிவந்து கொண்டிருந்தன. ஐந்து பாடல்கள், காமெடிக்கு என தனி டிராக் இல்லாத படங்களே இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள் இரண்டு மணி நேரம் அல்லது இரண்டேகால் மணி நேரமே அதிகபட்சமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் ’ஹீரோ’ திரைப்படம் கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணி நேரம் ரன்னிங் டைம் என்ற தகவல் மலைக்க வைத்துள்ளது. சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்சார் சர்டிபிகேட் பெற்ற நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 164 நிமிடங்கள் என அதாவது இரண்டு மணி நேரம் 44 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போது அனைத்து காட்சிகளும் சுவாரசியமாக இருந்ததால் 164 நிமிடங்கள் என்ற ரன்னிங் டைம் படத்திற்கு பாசிட்டிவ் ஆகவே இருக்கும் என கருதப்படுகிறது. மேலும் இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கிய இரும்புத்திரை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றதை அடுத்து அவருடைய அடுத்த படத்திற்கு மிக நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. எனவே அந்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யும் என்றே கருதப்படுவதால் 164 நிமிடங்கள் என்ற ரன்னிங் டைம் என்பது படத்திற்கு கூடுதல் பாசிட்டிவ் என்றே கருதப்படுகிறது.

சிவகார்த்திகேயன், அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, ஷ்யாம் கிருஷ்ணன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படம் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது என்பதும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

மருந்துகளின் விலையை 50 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ளலாம்..! தேசிய மருந்து பொருள் விலை நிர்ணய ஆணையம் அனுமதி.

பெருமளவில் பயன்படுத்தப்படும் ஆன்டிபயாட்டிக் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்திக் கொள்ள, தேசிய மருந்துப் பொருள் விலை நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது

எங்க ஊரையே காணும் சார்..! ராமநாதபுரத்தில் காணாமல் போன ஒரு கிராமம்.

சிட்டிசன் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமத்தைப் போல ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஒரு கிராமத்தையே வாக்காளர் பட்டியலில் காணவில்லை என அக்கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தற்கொலை செய்த கணவன், துக்கம் தாளாமல் குழந்தையை கொன்று தானும் இறந்த மனைவி..!

டெல்லியில் கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவி குழந்தையுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சிவகார்த்திகேயனின் அடுத்த பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடித்த 'ஹீரோ' படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமன்றி நேற்று இந்த படத்தின் சென்சார் தகவல் மற்றும்

தனுஷின் 'பட்டாஸ்' படத்தின் ஆச்சரியமான ரிலீஸ் தேதி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் வரும் பொங்கல்'விருந்தாக திரைக்கு வெளியாக உள்ளது. இதனையடுத்து தனுஷ் நடித்த 'பட்டாஸ்' திரைப்படம் ஒரு வாரம் அல்லது