சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தின் பக்கா ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Saturday,July 27 2019]

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கி வரும் 'ஹீரோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் டிசைன் மற்றும் ரிலீஸ் தேதி இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கவிருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படம் உலகம் முழுவதும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. டிசம்பர் 25ஆம் தேதி புதன்கிழமை கிறிஸ்துமஸ் விடுமுறை உள்ள நிலையில் அதற்கு முந்தைய வெள்ளியன்று இந்த படம் வெளியாவதால் நீண்ட விடுமுறை நாளில் இந்த படம் வெளியாவது பக்கா ஓப்பனிங் வசூலை பெறுவதற்கான சரியான திட்டம் என கருதப்படுகிறது. மேலும் இந்த படத்தின் அட்டகாசமான டைட்டில் டிசைனையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், இவானா , விவேக், யோகிபாபு, வடிவேலு உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அபய்தியோல் வில்லனாக நடிக்கின்றார். யுவன் சங்கர் ராஜா இசையில், ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது