சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' குறித்த லேட்டஸ்ட் அப்டேட்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று 'ஹீரோ'. இரும்புத்திரை' இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முதல்முறையாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்றுமுதல் தொடங்கியிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த புதிய அப்டேட் சிவகார்த்திகேயன் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
மேலும் 'ஹீரோ' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தயாராகி வருவதாகவும் விரைவில் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி குறித்த தகவல் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனேகமாக ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தில் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகலாம் என கருதப்படுகிறது. இந்த படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.
சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், இவானா , விவேக், யோகிபாபு, வடிவேலு உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அபய்தியோல் வில்லனாக நடிக்கின்றார். யுவன் சங்கர் ராஜா இசையில், ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது
#Hero final schedule begins with a bang ?? December 20, here we come!
— KJR Studios (@kjr_studios) August 7, 2019
Meanwhile, here's an exciting news... #HeroFirstLook coming soon! Any guesses when?@Psmithran @Siva_Kartikeyan @akarjunofficial @AbhayDeol @kalyanipriyan @thisisysr @george_dop @AntonyLRuben @selvavles pic.twitter.com/onmtE0US9c
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments