சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கு வந்த திடீர் சிக்கல்!
- IndiaGlitz, [Saturday,June 29 2019]
கோலிவுட் திரையுலகில் தற்போது டைட்டில் பஞ்சாயத்து ஒரு பெரிய பஞ்சாயத்தாக உள்ளது. 'கொலையுதிர்க்காலம்' திரைப்படம் டைட்டில் பஞ்சாயத்து காரணமாக திட்டமிட்ட நாளில் ரிலீஸ் ஆகாமல் நீதிமன்றம் வரை சென்றது. அதேபோல் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ஒன்றின் டைட்டிலான 'ஹீரோ' என்ற டைட்டிலை விஜய் தேவரகொண்டாவின் படம் ஒன்றுக்கும் வைக்கப்பட்டு அந்த பஞ்சாயத்து இன்னும் தீராமல் உள்ளது
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படத்திற்கு 'எங்க வீட்டு பிள்ளை' என்ற டைட்டில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. இந்த நிலையில் 'எம்ஜிஆர்' நடித்த 'எங்க வீட்டு பிள்ளை' படத்தை தயாரித்த பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரடொக்சன்ஸ் நிறுவனம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் 'எம்ஜிஆர்' நடித்த 'எங்க வீட்டு பிள்ளை' உள்பட தங்கள் நிறுவனம் தயாரித்த அனைத்து படங்களின் தலைப்புகளின் உரிமை இதுவரை எந்த நிறுவனங்களுக்கும் வழங்கப்படவில்லை என்றும், இதுகுறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே கடிதம் மூலம் தலைப்பு உரிமைக்காப்பு கோரி, தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் கொடுத்துள்ளதாகவும் தற்போது அதே நிலை தொடர்ந்து வருகிறது என்பதை இந்த உரிமைக்காப்பு கடிதம் மூலம் மீண்டும் நினைவூட்டுவதாகவும் தெரிவித்துள்ளது
இதனையடுத்து சிவகார்த்திகேயனின் படத்திற்கு 'எங்க வீட்டு பிள்ளை' டைட்டில் வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலை பேசி தீர்த்து அதே டைட்டிலை படக்குழுவினர் பெறுவார்களா? அல்லது வேறு டைட்டிலை தேர்வு செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்