மூன்றே நாளில் இத்தனை கோடியா? வசூலிலும் 'டான்' ஆன சிவகார்த்திகேயன்!

  • IndiaGlitz, [Monday,May 16 2022]

சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் 3 நாட்களில் வசூல் செய்த தொகை திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில், சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘டான்’. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் முதல் நாள் முதல் காட்சி முடிந்ததும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது.

இந்த நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிய நிலையில் தற்போது இந்த படம் 3 நாட்களில் 30 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘டான்’ திரைப்படம் முதல் நாளில் 13 கோடியும், இரண்டாவது நாளில் 11 கோடியும் மூன்றாவது நாளில் 9 கோடி வசூல் செய்த நிலையில் மூன்றே நாட்களில் 33 கோடி வசூல் செய்ததாக டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 40 கோடி என்ற நிலையில் பட்ஜெட் தொகையை மூன்றே நாட்களில் நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் மட்டுமின்றி வசூலிலும் சிவகார்த்திகேயன் ‘டான்’ ஆக மாறியுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.