'டான்' படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!

  • IndiaGlitz, [Tuesday,November 09 2021]

சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் அவர் தனது டப்பிங் பணியையும் முடித்து விட்டதாக டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது ’டான்’ படத்தின் மாஸ் அப்டேட் ஒன்றை சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ’டான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அவர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குஷியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனின் ’டான்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பில் அவர் புதிய போஸ்டர் ஒன்றையும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பதும், அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் ’டான்’ திரைப்படமும் அதே போன்ற வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் மற்றும் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பாலசரவணன் காளி வெங்கட், ஷிவாங்கி உள்பட பலர் நடித்துள்ளனர்.
 

More News

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படப்பிடிப்பு முடிவடைவது எப்போது?

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. முதல்கட்டமாக காரைக்குடி

கண், முகத்தில் காயம்… பிரபல நடிகையைத் தாக்கிய கணவர் கைது!

பாலிவுட் நடிகையும் மாடலுமான பூனம் பாண்டேவை தாக்கியதாகக் கூறப்படும் வழக்கில் அவரது கணவர் சாம் பாம்பே

கொரோனாவால் உயிரிழந்தோருக்கு ரூ.50,000 இழப்பீடு… தமிழக அரசு விளக்கம்!

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கும்படி

இந்தப் பயணம் கடினமானது… புற்றுநோய் அனுபவத்தை பகிர்ந்த மனிஷா கொய்ராலா!

தமிழ் மற்றும் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. இயக்குநர் மணிரத்னத்தின்

எதற்கும் ஒரு எல்லையுண்டு… இந்திய அணியை வெளுத்து வாங்கிய கபில்தேவ்!

இந்தியா டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.