சிவகார்த்திகேயனின் 'டான்': அடுத்தகட்ட பணிகள் தொடக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ’டாக்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 1 என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் இன்னொரு திரைப்படமான ’டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த கட்ட பணிகள் தொடங்கியுள்ளது.
’டான்’ படத்தின் டப்பிங் பணிகள் இன்று முதல் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சிவகார்த்திகேயன் தனது பகுதிக்கான டப்பிங் பணியை இன்று தொடங்கி உள்ளார். அவர் இன்னும் ஓரிரு நாட்களில் தனது பகுதியில் டப்பிங் பணியை முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து மற்ற நடிகர் நடிகைகளின் டப்பிங் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
சிபிச்சக்கரவர்த்தி என்பவரின் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிய இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் மற்றும் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பாலசரவணன் காளி வெங்கட், ஷிவாங்கி உள்பட பலர் நடித்துள்ளனர்.
Aarambichachu... ??
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) September 23, 2021
Dubbing of our #DON started with an auspicious pooja today ??️@Siva_Kartikeyan @KalaiArasu_ @LycaProductions @Dir_Cibi @anirudhofficial @priyankaamohan @iam_SJSuryah @sooriofficial @dop_bhaskaran @Inagseditor @Udaya_UAart @anustylist @tuneyjohn @DoneChannel1 pic.twitter.com/8RyPNGkUJe
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments