'டான்' படத்துடன் கனெக்சன் ஆகும் 'சந்திரமுகி 2': எப்படி தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றான ’சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்புக்கும் ’டான்’ படத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் பி வாசு இயக்கத்தில் உருவான திரைப்படம் ’சந்திரமுகி’. இந்த படம் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தகவல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் முக்கிய வேடத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராகவா லாரன்ஸ் தற்போது ‘ருத்ரன்’ மற்றும் ‘துர்கா’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த படங்களை முடித்த உடன் அவர் ’சந்திரமுகி 2’ படத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’டான்’ படத்தின் 25வது நாள் வெற்றி விழாவை சிறப்பாக கொண்டாட லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த வெற்றி விழாவின்போது தான் ‘சந்திரமுகி 2’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

More News

ஷிவானியின் செம சம்மர்லுக்: குவியும் ஏடாகூடமான கமெண்ட்ஸ்!

தொலைக்காட்சி தொடர் நடிகையான ஷிவானி நாராயணன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பிரபலமான நிலையில் சற்றுமுன் அவர் சம்மர்லுக்கில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்

'பத்தல பத்தல' பாடலுக்கு 'குக் வித் கோமாளி' ஸ்ருதிகா-வித்யூலேகா என்ன செஞ்சுருக்கா பாருங்க!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படத்தில் இடம்பெற்ற 'பத்தல பத்தல' என்ற பாடலுக்கு 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களான ஸ்ருதிகா மற்றும் வித்யூலேகா செய்த

நடிகை நமீதாவின் பிரெக்னெண்ட் போட்டோஷூட்: வைரல் வீடியோ

நடிகை நமீதா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக உள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

அறிவுரை கூறிய பாடகிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பதில் என்ன தெரியுமா?

பிரபல பாடகி ஒருவர் இசைப்புயல் ஏஆர் ரஹ்மானுக்கு அறிவுரை கூறிய நிலையில் அந்த அறிவுரைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய பதில் தற்போது வைரலாகி வருகிறது

பூஜா ஹெக்டேவின் அடுத்த படத்தை தயாரிக்கும் சிம்பு பட நடிகை: அதிகாரபூர்வ அறிவிப்பு

பூஜா ஹெக்டே நடிக்கும் அடுத்த திரைப்படத்தை சிம்பு படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஒருவர் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.