'டான்' சென்சார் தகவல்: இந்த படத்திற்கு சென்சார் கொடுத்த சிறப்பு என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,May 08 2022]

சிவகார்த்திகேயன் நடிப்பில், சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் ’டான்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும், இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும், குறிப்பாக சமீபத்தில் வெளியான ’டான்’ ட்ரெய்லர் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் சிவகார்த்திகேயன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ’டான்’ படத்தின் சென்சார் தகவலை பகிர்ந்துள்ளார். சென்சார் அதிகாரிகள் ’டான்’ திரைப்படத்தை பார்த்து 'யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனை அடுத்து வரும் 13-ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆவது 100% உறுதி செய்யப்பட்டுள்ளது .

மேலும் ஒரு திரைப்படத்தில் மது அருந்தும் காட்சிகள் அல்லது புகைபிடிக்கும் காட்சிகள் வந்தால் அதற்கு எச்சரிக்கையுடன் கூடிய சப்டைட்டில் பதிவு செய்ய வேண்டும் என்பது சென்சார் விதிகளில் ஒன்று. ஆனால் ’டான்’ திரைப்படத்தில் அதற்கான வேலையே இல்லை, ஏனெனில் இந்த படத்தின் ஒரு காட்சியில் கூட மது அருந்தும் காட்சிகளோ, புகைப்பிடிக்கும் காட்சிகளோ இல்லை என்பதால் வார்னிங் மெசேஜ் சப்டைட்டில் இல்லாத ஒரு படமாக இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் சென்சார் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்யும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், ஷிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, பாலசரவணன், சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ள இந்த படத்தை லைக்கா மற்றும் சிவகார்த்திகேயன் புரோடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன.