வெளியானது சிவகார்த்திகேயனின் அட்டகாசமான 'டான்' ஃபர்ஸ்ட்லுக்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் தனது பகுதியின் டப்பிங் பணியை நேற்று முடித்தார் என்பதும் அதன் பின்னர் மற்ற நட்சத்திரங்கள் தங்களுடைய டப்பிங் பணியை தற்போது செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிவகார்த்திகேயன், ஷிவாங்கி, பால சரவணன் உள்ளிட்ட பலர் உள்ளனர் என்பதும் இந்த போஸ்டரில் இருந்து படம் கலர்ஃபுல்லாக இருக்கும் என்றும் தெரிய வருகிறது. குறிப்பாக கல்லூரிகளில் நடக்கும் ஜாலியான காட்சிகள் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி, சூரி, பாலசரவணன், காளி வெங்கட், ஷிவாங்கி உள்பட பலர் நடித்துள்ளனர். சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#DonFirstLook ??
— Anirudh Ravichander (@anirudhofficial) November 10, 2021
Students assemble ??@Siva_Kartikeyan back to college ??@Dir_Cibi directorial ??@KalaiArasu_ @SKProdOffl @LycaProductions @priyankaamohan @iam_SJSuryah @thondankani @sooriofficial @bhaskaran_dop @Inagseditor @Bala_actor @RJVijayOfficial @sivaangi_k pic.twitter.com/nme9QTaIot
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments