ரூ.100 கோடி வசூல் செய்தது 'டான்': சிவகார்த்திகேயனின் தொடர் செஞ்சுரி!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் அவருடைய அடுத்த படமான ’டான்’ திரைப்படமும் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததை அடுத்து சிவகார்த்திகேயன் தொடர்ச்சியாக இரண்டு படங்களில் செஞ்சுரி அடித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில், சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ’டான்’. இந்த படம் சமீபத்தில் வெளியான நிலையில் முதல் நாள் முதல் காட்சி முதல் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன.
மேலும் ஐந்தே நாட்களில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த இந்த படம் மிக விரைவில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் 12 நாட்களில் ’டான்’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் தொடர் செஞ்சுரி அடித்துள்ளார்.
மாஸ் நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்களே எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில் சிவகார்த்திகேயனின் இரண்டு படங்கள் தொடர்ச்சியாக 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
#DON ?? hits the coveted 100Cr ?? mark in 12 days. Thank you one & all for making our DON a MEGA BLOCKBUSTER ??#MegaBlockbusterDON ?? #DONHits100Cr ?? #DONWon ??@Siva_Kartikeyan @SKProdOffl @KalaiArasu_ @Udhaystalin @RedGiantMovies_ @anirudhofficial @Dir_Cibi @priyankaamohan pic.twitter.com/nUpl3aIdQB
— Lyca Productions (@LycaProductions) May 25, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com