சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' ரிலீஸ் குறித்த தகவல்!

சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில மாதங்கள் ஆன நிலையிலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இந்த படம் வெளியாக முடியாத நிலையில் உள்ளது. மேலும் ஓடிடியில் இந்த படம் வெளியாவதில் சிக்கல் இருப்பதால் ஓடிடியில் ரிலீஸ் செய்யமுடியாத நிலை ஏற்பட்டதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி வருவதை அடுத்து அடுத்த மாதம் திரையரங்குகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ‘டாக்டர்’ படத்தை நேரடியாக திரையரங்கில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ படத்தை இயக்கி வரும் நெல்சன் இயக்கியுள்ள ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் வில்லனாக நடிகர் வினய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

சதம் அடித்த பெட்ரோல்… மத்திய அரசின் வரிக் கொள்ளை என காங்கிரஸ் மூத்தத் தலைவர் காட்டம்!

தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி விட்டது.

12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவது இப்படித்தான்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கு இப்படித்தான் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார். முதல்வர் அறிவித்துள்ள 12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடும் முறை

வரலாற்று முக்கியத்தும் கொண்ட ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கின் தீர்ப்பு!

அமெரிக்காவில் இனவெறி தாக்குதலில் சிக்கி உயிரிழந்த ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு மீதான தீர்ப்பு இன்று வெளியாகி உள்ளது

தமிழகத்தில் 6- ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு....!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், சுமார் 5,755  நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசிக்கு பதிலாக வெற்று ஊசியை செலுத்திய நர்ஸ்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

பீகார் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும்போது அவசரத்தில் செவிலியர் ஒருவர் வெற்று ஊசியை இளைஞர் ஒருவருக்கு செலுத்தி உள்ளார்.