சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படுவதாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் ‘டாக்டர்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி என்ன என்பது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் ‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
புதிய வெளியீட்டு தேதி ஒன்றை முடிவு செய்துள்ளோம். டாக்டர் வருண் மற்றும் குழுவினரை திரை அரங்குகளில் ரமலான் பண்டிகையை அன்றிலிருந்து சந்திக்கலாம். இந்த சமயத்தை எங்களது டாக்டரை மெருகேற்ற பயன்படுத்த உள்ளோம். நீங்கள் தவறாமல் மறக்காமல் வாக்களிக்கவும். நினைவிருக்கட்டும் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. திரையரங்குகளில் சந்திக்கலாம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது
ரமலான் பண்டிகை மே 14ஆம் தேதி கொண்டாடப்படுவதை அடுத்து அன்றைய தினம் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது
We're bringing #DoctorForRamzan ??
— KJR Studios (@kjr_studios) March 11, 2021
Get ready to meet Dr. Varun & Co in theaters this Ramzan ??
In the meantime, we urge you to go vote. See you in the Cinemas ??️@Siva_Kartikeyan @Nelsondilpkumar @anirudhofficial @SKProdOffl @DoneChannel1 @proyuvraaj @gobeatroute #Doctor pic.twitter.com/tGcyNi47d2
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments