சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு கொண்டிருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகுமா? அல்லது ஓடிடியில் வெளியாகுமா? என்ற சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோ நிறுவனம் ‘டாக்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என உறுதி செய்தது. மேலும் அக்டோபர் மாதம் இந்த படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதன்படி சற்றுமுன்னர் ‘டாக்டர்’ திரைப்படம் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 13ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தில் விஷாலின் ‘எனிமி’ மற்றும் ஆர்யாவின் ‘அரண்மனை 3’ உள்ளிட்ட ஒருசில படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே ‘டாக்டர்’ திரைப்படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள இந்த படத்தில் வினய், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை நெல்சன் இயற்றியுள்ளார். இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Get ready to visit the #Doctor who can make you sit back, laugh & enjoy!#DoctorFromOct9 in theatres near you ??@Siva_Kartikeyan @Nelsondilpkumar @anirudhofficial @SKProdOffl #Vinay @priyankaamohan @KalaiArasu_ @DoneChannel1 @proyuvraaj @sonymusicsouth @gobeatroute pic.twitter.com/1NR3Hye3Ob
— KJR Studios (@kjr_studios) September 18, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments