ஓடிடியில் சிவகார்த்திகேயனின் 'டாக்டர்? வைரலாகும் போஸ்டர்!

  • IndiaGlitz, [Tuesday,June 29 2021]

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ‘டாக்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில மாதங்கள் ஆன நிலையில், ஊரடங்கு காரணமாக திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாகவும் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படம் ஓடிடியில் ரிலீசாக வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் ‘டாக்டர்’ படம் வெளியாகவிருப்பதாக சமூக வலை தளங்களில் போஸ்டர் ஒன்று பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில் ‘டாக்டர்’திரைப்படம் நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு. மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஹாட்ஸாரில் வெளியாக இருப்பதாக கூறப்படுள்ளது. இருப்பினும் அந்த போஸ்டரில் ரிலீஸ் தேதி அறிவிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை படக்குழுவினர் உறுதி செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள இந்த படத்தில் வினய் வில்லனாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் இயக்கி உள்ளார் என்பதும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது