சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' ரிலீஸ் அப்டேட் தந்த தயாரிப்பாளர்!

  • IndiaGlitz, [Wednesday,May 12 2021]

சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி கடந்த மார்ச் மாதம் என்றும் அதன் பின்னர் மே மாதம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. மேலும் இந்த படம் ஓடிடியில் ரிலீசாக போவதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது

இந்த நிலையில் ‘டாக்டர்’ ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ரசிகர்கள் தொடர்ச்சியாக கேட்டு வருகின்றனர். நானும் ஒரு தயாரிப்பாளராக இந்த படத்தை சரியான தேதியில் ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டுதான் வருகின்றேன்.

ஆனால் அதே நேரத்தில் நமது திரையுலக சொந்தங்கள் கொரோனாவால் உயிர் இழந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ‘டாக்டர்’ ரிலீஸ் குறித்து சிந்திக்கவே என்னால் முடியவில்லை. முதலில் நமது நாடு கொரோனாவில் இருந்து மீளட்டும், அதன் பிறகு ‘டாக்டர்’ ரிலீஸ் குறித்து யோசிக்கலாம். அதுவரை தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக குடும்பத்துடன் வீட்டிலேயே இருங்கள்’ என்று கூறியுள்ளார்.

More News

ஆக்சிஜன் பற்றாக்குறை… மீண்டும் 26 நோயாளிகள் உயிரிழந்த அவலம்!

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் இந்தியா முழுக்கவே ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்து வருகிறது.

தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர்… யார் இந்த சண்முகச்சுந்தரம்?

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிப்பெற்று மே 7 ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது.

சிவாஜியின் தோல்வியை விட கமல் தோல்வி பெரிது அல்ல: சாருஹாசன்

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு கமல்ஹாசன் தோல்வி அடைந்தார். இந்த தோல்வி குறித்து அவருடைய சகோதரர் சாருஹாசன் ஊடகம் ஒன்றுக்கு

சமீபத்தில் பிறந்த மகனுடன் செல்வராகவன்: வைரல் புகைப்படம்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கீதாஞ்சலி என்பவரை கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்

உதயநிதிக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன்‌: வெங்கட்பிரபு உருக்கமான அறிக்கை!

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு அவர்களின் தாயாரும் இசையமைப்பாளர்-இயக்குனர் கங்கைஅமரன் அவர்களின் மனைவியுமான மணிமேகலை என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் காலமானார்