தீபாவளி ரேஸில் இணைகிறதா சிவகார்த்திகேயன் படம்?

  • IndiaGlitz, [Tuesday,October 26 2021]

வரும் தீபாவளி அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படம் மற்றும் ஆர்யா, விஷால் நடித்த ’எனிமி’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஓடிடியில் சூர்யாவின் ’ஜெய்பீம்’ என்ற திரைப்படம் மற்றும் சசிகுமாரின் ‘எம்ஜிஆர் மகன்’ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தீபாவளி அன்று வெளியாக இருந்த சிம்புவின் ’மாநாடு’ திரைப்படம் நவம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தீபாவளி ரேஸில் சிவகார்த்திகேயன் படம் ஒன்று இணைந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கிய ’டாக்டர்’ என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூலை குவித்து வருகிறது என்பதும் இந்த படம் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கி விட்டது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் வரும் தீபாவளிக்கு இந்த படத்தை சன் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய வரவேற்பை ரசிகர் மத்தியில் பெற்ற இந்த படம் சன் டிவியில் தீபாவளி அன்று ஒளிபரப்பானால் டிஆர்பி ரேட்டிங் எகிறும் என்பது உறுதி என்றே திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
 

More News

ஷங்கர் - ராம்சரண் படத்தில் வில்லனாக நடிப்பது பாராளுமன்ற எம்பியா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

தனுஷின் அடுத்த படம் ஓடிடியில் ரிலீஸா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீசான போது தனது அதிருப்தியை தனுஷ் தெரிவித்து இருந்தார் என்பதும் ரசிகர்களும் இந்த படமும் திரைக்கு வரவில்லை என்று

அசர வைக்கும் நடிகர் மாதவனின் மகன்… பதக்கங்களை குவித்து சாதனை!

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக விளங்கும் நடிகர் மாதவனின் மகன்

ரூ.3 கோடி வரி பாக்கி… ஆட்டோ ஓட்டுநருக்கு வந்த நோட்டீஸால் அதிர்ச்சி!

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு ரூ.3 கோடி வருமான வரி

ரஜினியை 'தலைவா' என அழைத்து வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் பிரபலம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேற்று திரை உலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது என்பதும் இதனை அடுத்து பல அரசியல் பிரபலங்கள், திரை உலக பிரபலங்கள்,