சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' திரைப்படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்!
- IndiaGlitz, [Thursday,May 13 2021]
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான திரைப்படம் ‘டாக்டர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து மார்ச் மாதம் ரிலீசாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மே மாதம் ஒத்திவைக்கப்பட்டது என்பதும் ஆனால் தற்போதும் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் ரிலீஸ் செய்ய முடியாத நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகப் போவதாக ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தற்போதைக்கு யோசிக்க முடியாது என்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில் ‘டாக்டர்’ ரிலீஸ் குறித்த அப்டேட்டுகளை தெரிவிக்க விரும்பவில்லை என்றும் நேற்று தயாரிப்பாளர் ராஜேஷ் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தில் சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் 148 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 28 நிமிடங்கள் ரன்னிங் டைம் ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் சென்சார் செய்யப்பட்டதை அடுத்து திரையரங்குகளில் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.