சிவகார்த்திகேயனின் 'டிசம்பர்' அறிவுரைகளும் வெற்றிகளும்...

  • IndiaGlitz, [Sunday,December 22 2019]

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 3 ஆண்டுகளாக டிசம்பர் மாதம் வெளிவந்த திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதாக சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு அதனை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ’வேலைக்காரன்’ திரைப்படமும், 2018 ஆம் ஆண்டு 'கனா' திரைப்படமும், 2019ஆம் ஆண்டு 'ஹீரோ' திரைப்படமும் டிசம்பர் மாதத்தில் வெளி வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மூன்று படங்களும் நல்ல வெற்றியை பெற்றுள்ளது என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளது மட்டுமன்றி சமூகத்திற்கு தேவையான மூன்று முக்கிய விஷயங்களை இந்த படங்கள் உணர்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

’வேலைக்காரன் படத்தில் உணவுப் பொருள்களில் செய்யும் கலப்படம் குறிப்பும், கனா படத்தில் விவசாயம் மற்றும் விளையாட்டுத் துறையில் உள்ள பிரச்சனைகள் குறித்தும், ஹீரோ படத்தில் கல்வித்துறையில் உள்ள சீர்கேடுகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளதால் சமூக கருத்துகளை கூறி வெற்றி அடைந்த சிவகார்த்திகேயனை வாழ்த்துவதாகவும் அவரது ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் டிசம்பரில் வெற்றி பெற்று வரும் சிவகார்த்திகேயனுக்கு அடுத்த ஆண்டு டிசம்பரில் என்ன வெற்றிப்படம் வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

குஷ்புவை 'கூ...' என திட்டிய பிரபல நடிகை!

மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய குடியுரிமை சீர்திருத்த மசோதாவினால் அரசியல்வாதிகள் மட்டுமின்றி திரையுலகினர்களும் மோதிக் கொண்டு வருகின்றனர்.

கோவை பொதுக்கூட்டத்தில் சிக்கி கொண்ட ஐயப்ப பக்தர்களுக்கு சாலையை கடக்க உதவிய இஸ்லாமியர்கள். வீடியோ.

கோவையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் இஸ்லாமியர்கள் சாலையில் தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது சாலையை கடக்க முடியாமல் தவித்த ஐயப்ப பக்தர்களுக்கு சிலர் உதவி செய்த வீடியோ இப்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது.

கங்குலிக்கு கடுமையான கண்டனம் தெரிவித்த ரஜினி பட நடிகை!

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் மகள் சனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் சமீபத்தில் ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார்

தொலைந்த நாயை தேட வாடகைக்கு விமானம் எடுத்த இளம்பெண்

அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தான் செல்லமாக வளர்த்த நாய் தொலைத்ததால் அந்த நாயை தேடுவதற்காக விமானத்தை வாடகைக்கு எடுப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 

அண்ணா பல்கலைக்கழக மாணவர் தற்கொலை: அதிர்ச்சி காரணம்!

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இன்று முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப் பட்டுள்ள