சிவகார்த்திகேயனின் 'அயலான்' படம் குறித்த முக்கிய அப்டேட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ’டாக்டர்’ திரைப்படம் மார்ச் 26ஆம் தேதி ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் நடித்து முடித்துள்ள இன்னொரு திரைப்படமான ‘அயலான்’ படத்தின் முக்கிய அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ’அயலான்’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இன்று முதல் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் டப்பிங் பூஜை குறித்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளது.
முதல்கட்டமாக இந்த படத்தில் காமெடி கேரக்டரில் நடித்துள்ள கருணாகரன் இன்று டப்பிங் செய்வது போன்ற புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் டப்பிங்கில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Ayalaan dubbing begins today??️@Siva_Kartikeyan @arrahman @Ravikumar_Dir @Rakulpreet @ishakonnects @SharadK7 @iYogiBabu @Bala_actor #Karunakaran #Niravshah @muthurajthangvl @anbariv @AntonyLRuben @dancersatz @gopiprasannaa @Pallavi_offl @Synccinema @phantomfx_india @kjr_studios pic.twitter.com/Fb9v1fTsaq
— 24AM STUDIOS (@24AMSTUDIOS) February 24, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com