close
Choose your channels

சிவகார்த்திகேயனின் 'அயலான்' ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பண்டிகை நாளில்  செம்ம   விருந்து..!

Monday, April 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அயலான்’. இந்த படம் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.மேலும் இந்த படம் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டு

வருவதாகவும் உலகின் பல மொழிகளில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ‘அயலான்’ படத்தின் முக்கிய அப்டேட் இன்று காலை 11.04 மணிக்கு வெளியாகும் என்று நேற்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘அயலான்’ திரைப்படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தீபாவளி பண்டிகை நாளில் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருடைய அடுத்த படமான ‘அயலான்’ திரைப்படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment