சிவகார்த்திகேயனின் 'அயலான்' ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பண்டிகை நாளில்  செம்ம   விருந்து..!

  • IndiaGlitz, [Monday,April 24 2023]

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அயலான்’. இந்த படம் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.மேலும் இந்த படம் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டு

வருவதாகவும் உலகின் பல மொழிகளில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ‘அயலான்’ படத்தின் முக்கிய அப்டேட் இன்று காலை 11.04 மணிக்கு வெளியாகும் என்று நேற்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘அயலான்’ திரைப்படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தீபாவளி பண்டிகை நாளில் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருடைய அடுத்த படமான ‘அயலான்’ திரைப்படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சாதி பெயரை சொல்லி திட்டினார், காதலிப்பதாக கூறி ஏமாற்றினார்.. விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் புகார்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விக்ரமன் பல்வேறு புரட்சிகரமான கருத்துக்களை கூறி மக்கள் மனதில் இடம் பிடித்த நிலையில் அவர் தன்னுடைய சாதி பெயரை சொல்லி திட்டினார்

குழந்தை விவகாரம்.. நீதிமன்ற தீர்ப்பை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிக்பாஸ் ரக்ஷிதா ..!

 பிக்பாஸ் ரக்ஷிதா தனது சமூக வலைதளத்தில் குழந்தை குறித்து நீதிமன்ற தீர்ப்பு ஒன்றை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். 

'லால் சலாம்' குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினி.. ஜாலியான புகைப்படங்கள்..!

 ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக

நீச்சல் குளத்தில் செம்ம கிளாமரில் அமலாபால்.. தண்ணீருக்குள் புகுந்து வீடியோ எடுத்த கேமிராமேன்..!

நடிகை அமலா பால் நீச்சல் குளத்தில் செம்ம கிளாமர் பிகினி உடையில் நீந்தி கொண்டிருப்பதை கேமராமேன் தண்ணீருக்குள் புகுந்து படம் எடுத்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அச்சு அசலாக 'சாகுந்தலா' சமந்தாவாக மாறிய நடிகை.. தூக்கலான கிளாமரால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி..!

நடிகை சமந்தா நடித்த 'சாகுந்தலா' என்ற திரைப்படம் சமீபத்தில் தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.