close
Choose your channels

மீண்டும் தள்ளிப்போகிறதா சிவகார்த்திகேயனின் 'அயலான்'? 2 பெரிய படங்களுடன் மோதுகிறதா?

Wednesday, September 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில் உருவான ’அயலான்’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

’அயலான்’ திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பின்னர் 2021 இறுதியிலும் 2022 ஆம் ஆண்டும் படப்பிடிப்பு நடந்தது.

இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டாலும் இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் பணி அதிகமாக இருப்பதால் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் ’அயலான்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் இன்னும் முடிவடைந்தால் பட ரிலீஸ் தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வந்துள்ள தகவல் படி அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் தான் ’அயலான்’ வெளியாகும் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் பிரபாஸ் நடித்த ’சலார்’ மற்றும் விக்ரம் நடித்த ’தங்கலான்’ ஆகிய படங்கள் வெளியாக இருப்பதால் இரண்டு பெரிய படங்களுடன் ’அயலான்’ மோதுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment