close
Choose your channels

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்று ஒரே நாளில் டபுள் ட்ரீட்:

Monday, February 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருடைய பிறந்த நாள் பரிசாக இன்று காலை 11 மணிக்கு சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’டாக்டர்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்த நிலையில் தற்போது அவரது ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட்டாக சிவகார்த்திகேயன் அடுத்து வரும் இன்னொரு படமான ’அயலான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 7 மணிக்கு சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிவகார்த்திகேயனும் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

‘இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அயலான்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரித்திசிங் நடித்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’டாக்டர்’ மற்றும் ‘அயலான்’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று ஒரே நாளில் இரு படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி அவரது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment