'அயலான்' சென்சார் செய்த அதிகாரிகளுக்கு ஆச்சரியம்.. ரன்னிங் டைம் எவ்வளவு?

  • IndiaGlitz, [Tuesday,January 09 2024]

கடந்த சில ஆண்டுகளாக தயாரிக்கப்படும் தமிழ் திரைப்படங்கள் அனைத்துமே சென்சாரில் கிட்டத்தட்ட ’யுஏ’ சான்றிதழ் பெற்று வருகிறது என்பதும் சில படங்களுக்கு ‘ஏ’ சான்றிதழ் கூட வழங்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எப்போதாவது அத்திப்பூத்தாற்போல்தான் சில தமிழ் படங்களுக்கு ’யூ’ சான்றிதழ் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்’ திரைப்படத்தின் சென்சார் தகவல் தற்போது வந்துள்ள நிலையில் இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ஒரு காட்சியை கூட கட் செய்யவில்லை என்றும் இதனை அடுத்து முழுமையாக படத்தை சென்சார் செய்து படத்துக்கு ’யூ’ சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 35 நிமிடங்கள் என்றும் அதாவது 155 நிமிடங்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ’யூ’ சான்றிதழ் பெற்று வருகிறது என்பதும் அதனால்தான் அவருக்கு குழந்தைகளின் ரசிகர்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனது படத்தில் சிகரெட், மது குடிக்கும் காட்சிகளை கூட சிவகார்த்திகேயன் தவிர்த்து வருகிறார் என்றும் அதிகப்படியான வன்முறை, கெட்ட வார்த்தை வசனம் உள்ளிட்ட எதுவுமே இல்லாததால் அவரது படங்களுக்கு தொடர்ச்சியாக ’யூ’ சான்றிதழ் கிடைத்து வருகிறது என்றும் அவர் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து வருகின்றன.