சிவகார்த்திகேயனுக்கு உதவி செய்ய முன்வந்த 5 பிரபலங்கள்.. இன்று மாலை மாஸ் டிரைலர்..!

  • IndiaGlitz, [Wednesday,October 23 2024]

சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாக இருக்கும் நிலையில், 5 மொழிகளில் 5 பிரபலங்கள் இந்த டிரைலரை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அமரன்.' தாய் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், தீபாவளி அன்று திரையரங்கில் வெளியாக உள்ளது. இதற்கான டிரைலர் இன்று மாலை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 'அமரன்' படத்தின் டிரைலர் 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. தமிழில் கமல்ஹாசன், தெலுங்கில் நானி, கன்னடத்தில் சிவராஜ்குமார், ஹிந்தியில் அமீர்கான் மற்றும் மலையாளத்தில் டொவினோ தாமஸ் ஆகிய இந்திய திரையுலக பிரபலங்கள் இந்த டிரைலரை வெளியிட உள்ளனர்.

சிவகார்த்திகேயனுக்கு 'அமரன்' படம் ஒரு பான் இந்திய நடிகர் என்ற அந்தஸ்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தீபாவளிக்கு சினிமா ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்து உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்த கேம் மேலேயே எனக்கு ஒரு கேள்வி இருக்கு.. சுனிதாவின் கருத்தை பிக்பாஸ் பரிசீலிப்பாரா?

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த சீசனில் ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி என இரண்டு அணிகளாக பிரித்து

என்னுடன் தங்கினால் 7000 டாலர் தருகிறேன்.. நடிகைக்கு மெசேஜ் அனுப்பிய 100 வயது நபர்.!

100 வயது நபர் ஒருவர் பிரபல நடிகையிடம்  'என்னுடன் தங்கினால் 7000 முதல் 8000 டாலர் தருகிறேன்' என்று மெசேஜ் அனுப்பியதாக அந்த நடிகை சமீபத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சிகளில் கூறி இருப்பது

இம்முறை வாழ்க்கை நன்றாக செல்லும்: 4வது திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகர் பேட்டி..!

ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்த தமிழ் நடிகர், இன்று நான்காவது திருமணம் செய்து கொண்டதை அடுத்து, இந்த பெண் உறவுக்கார பெண் என்பதால் இம்முறை

முத்துக்குமார் நீக்கம்.. பிக்பாஸ் போட்ட உத்தரவால் பரபரப்பு..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஸ்டார் ஹோட்டல் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே மேனேஜராக இருந்த பவித்ரா ஜனனி நீக்கப்பட்டு, முத்துக்குமார் மேனேஜராக இருக்கும் நிலையில், த

தமிழை பத்தி தப்பா பேசாதே.. ரியாலிட்டி ஷோவில் பொங்கி எழுந்த மலையாள நடிகர்..!

தமிழைப் பற்றி தப்பா பேசாதே என மலையாள நடிகர் ஒருவர் ரியாலிட்டி ஷோவில் பொங்கி எழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.