சிவகார்த்திகேயனுக்கு உதவி செய்ய முன்வந்த 5 பிரபலங்கள்.. இன்று மாலை மாஸ் டிரைலர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாக இருக்கும் நிலையில், 5 மொழிகளில் 5 பிரபலங்கள் இந்த டிரைலரை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அமரன்.' தாய் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், தீபாவளி அன்று திரையரங்கில் வெளியாக உள்ளது. இதற்கான டிரைலர் இன்று மாலை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 'அமரன்' படத்தின் டிரைலர் 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. தமிழில் கமல்ஹாசன், தெலுங்கில் நானி, கன்னடத்தில் சிவராஜ்குமார், ஹிந்தியில் அமீர்கான் மற்றும் மலையாளத்தில் டொவினோ தாமஸ் ஆகிய இந்திய திரையுலக பிரபலங்கள் இந்த டிரைலரை வெளியிட உள்ளனர்.
சிவகார்த்திகேயனுக்கு 'அமரன்' படம் ஒரு பான் இந்திய நடிகர் என்ற அந்தஸ்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தீபாவளிக்கு சினிமா ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்து உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.
#AmaranTrailer to revealed by @ikamalhaasan #AamirKhan, @NimmaShivanna, @NameisNani, @ttovino
— Saregama South (@saregamasouth) October 23, 2024
A @gvprakash Musical 🎶#Amaran #AmaranDiwali #AmaranOctober31 💥
🎬 @Rajkumar_KP @ikamalhaasan @Siva_Kartikeyan @Sai_Pallavi92 #Mahendran @anbariv pic.twitter.com/s9FbGi1KcG
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com