சூர்யாவுடன் மோதல் இல்லை.. ஆனால் ரஜினியுடன் மோதலா? 'அமரன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு..
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக சூர்யாவின் ’கங்குவா’ ரிலீஸ் ஆகும் அக்டோபர் 10ஆம் தேதி தான் சிவகார்த்திகேயனின் 'அமரன்’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ரஜினியின் ’வேட்டையன்’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் தேதியில் 'அமரன்’ ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் ’கங்குவா’ திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி ரிலீஸ் ஆகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அதே தேதியில் ரிலீஸ் ஆக திட்டமிடப்பட்டிருந்த ரஜினியின் ’வேட்டையன்’ திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று கூறப்பட்டது.
’கங்குவா’ படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இதனை சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார். ரஜினி படத்துடன் மோதும் அளவுக்கு நாங்கள் பெரிய ஆள் இல்லை என்றும் ’வேட்டையன்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது என்பதை உறுதி செய்த பின்னால் தான் நாங்கள் அக்டோபர் 10 ஆம் தேதியை தேர்வு செய்தோம் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் ’அமரன்’ திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் அதாவது அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தீபாவளிக்கு ’வேட்டையன்’ ’அமரன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கும் பிரபல நடிகர்களின் படங்களின் ரிலீஸ் தேதி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"There lived a man who never feigned to be a hero..."
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 17, 2024
Let’s celebrate our #Amaran - #MajorMukundVaradarajan this Diwali 🙏👍
A film by @Rajkumar_KP#AmaranDiwali@ikamalhaasan #Mahendran @anbariv @gvprakash @Sai_Pallavi92 @RKFI @SonyPicsIndia @sonypicsfilmsin @turmericmediaTM… pic.twitter.com/SmeInSTUJz
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com