சிவகார்த்திகேயன் பட வரலாற்றில் மிகப்பெரிய சாதனை.. ஓடிடி ரிலீஸ் மட்டும் இத்தனை கோடியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’அமரன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமை விற்பனை செய்யப்பட்டு விட்டதாகவும் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய தொகைக்கு இந்த படம் ஓடிடி நிறுவனத்திற்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’அமரன்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் இதனை அடுத்து டீசர், ட்ரெய்லர் ஆகியவற்றை வெளியிட படக்குழுவினர் தயாராகி வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தின் வியாபாரம் ஆரம்பித்துள்ள நிலையில் முதல் கட்டமாக நெட்பிளிக்ஸ் இந்த படத்தை 60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் சிவகார்த்திகேயன் திரைப்பட வாழ்வில் ஓடிடி ரிலீஸ் உரிமை மட்டும் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது இந்த படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட பட்ஜெட்டில் முக்காவாசி ஓடிடி ரிலீஸ் வியாபாரத்திலேயே வந்துவிட்ட நிலையில் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி உள்ளனர். மேலும் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமை, வெளிநாட்டு உரிமை, உள்நாட்டு உரிமை, தமிழக உரிமை என சுமார் 200 கோடி ரூபாய் வரை பிசினஸ் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயனுக்கு ’அமரன்’ படம் ஒரு மைல்கல்லாக அமையும் என்று கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com