சிவகார்த்திகேயனின் 'அமரன்' இசை வெளியீடு எப்போது? எங்கே? சூப்பர் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,October 16 2024]

சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளிவருகிறது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி மற்றும் விழா நடைபெறும் இடம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளதால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்திய ராணுவத்தில் பணியாற்றி வீர மரணம் அடைந்த முகுந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக ‘அமரன்’ உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ளனர். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த படம் ஏற்கனவே தீபாவளி வெளியீடாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு பகலாக படக்குழுவினர் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. திட்டமிட்டபடி சரியாக ரிலீஸ் செய்யப்படுவதற்காக படக்குழு முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 18 ஆம் தேதி, அதாவது நாளை மறுநாள், சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

6க்கு 16.. மீண்டும் அர்ச்சனா கல்பாத்தியுடன் இணைந்த த்ரிஷா.. வைரல் புகைப்படங்கள்..!

அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில், விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில் நடிகை  த்ரிஷா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த நிலையில், மீண்டும் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் த்ரிஷா இணைந்ததாக

6 வருடங்களுக்கு பின் மீண்டும் இயக்குனர் களத்தில் அர்ஜுன்.. டைட்டில் அறிவிப்பு..!

தமிழ் திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக நடித்து வரும் ஆக்சன் கிங் அர்ஜுன், 6 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு, அந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது.

என்.டி.ஆர் பாலகிருஷ்ணாவின் சூப்பர் ஹிட் படம்.. பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்..!

என் டி ஆர் பாலகிருஷ்ணா நடித்த சூப்பர் ஹிட் படம் ஒன்றின் இரண்டாம் பாகத்தின் பூஜை இன்று நடைபெறுவதை அடுத்து படக்குழுவினர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 இனி பேட்டி, வீடியோ கிடையாது:  திடீரென அதிரடி முடிவெடுத்த பாடகி சுசித்ரா..!

பாடகி சுசித்ரா அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் வீடியோவை வெளியிட்டும் YouTube சேனல்களில் பேட்டி அளித்தும் வந்த நிலையில் தற்போது மும்பையில் செட்டில் ஆகப் போவதாகவும்

என்ன ஆச்சு நிரோஷாவுக்கு? 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' படப்பிடிப்புக்கு தூக்கி கொண்டு வந்த நடிகர்..!

நடிகை நிரோஷா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "பாண்டியன் ஸ்டோர் 2" என்ற சீரியலில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த படப்பிடிப்புக்கு, அவரை அவரது மகன் கேரக்டரில் நடிக்கும் நடிகர்