சிவகார்த்திகேயன் செய்த மிகப்பெரிய உதவி
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'ரஜினிமுருகன்' திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர் வெற்றிகரமாக வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் கடலூர் பகுதிகளில் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டு வந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் சமீபத்தில் வெள்ள நிவாரண பணியில் ஈடுபட்டிருந்த இம்ரான் என்பவர் பலியானதை கேள்விப்பட்டு மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளான சிவகார்த்திகேயன் தற்போது இம்ரானின் குடும்பத்தினர்களுக்கு நேரில் ஆறுதல் கூறியதோடு நிதியுதவியும் செய்துள்ளார்.
மேலும் மறைந்த இம்ரான் சகோதரியின் கல்வி செலவு முழுவதையும் சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார். இதனால் அந்த சகோதரிக்கு அண்ணன் இல்லாத குறை நீங்கியுள்ளதாக இம்ரான் குடும்பத்துடன் நெகிழ்ச்சியுடன் இருப்பதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் உதவி செய்யும் மனப்பான்மைக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com