ஏழை மாணவி சஹானாவின் 'கனா'வை நிறைவேற்றும் சிவகார்த்திகேயன்!

  • IndiaGlitz, [Wednesday,April 24 2019]

சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு வெளியான நிலையில் இந்த தேர்வை எழுதிய தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த சஹானா என்ற மாணவி 600க்கு 524 மதிப்பெண் பெற்றுள்ளார். கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான இந்த பகுதியில், மின்விளக்கு இல்லாத ஒரு குடிசையில் வளர்ந்த இந்த மாணவி, இந்த மதிப்பெண்ணை எடுத்துள்ளதற்கு பாராட்டுக்கள் குவிந்தது.

ஆனால் அதே நேரத்தில் மாணவி சஹானா மருத்துவம் படிக்க விரும்புவதாகவும், அவருக்கு பண உதவி தேவை என்றும் அவருடைய உறவினர்கள் டுவிட்டரில் பலர் பதிவு செய்தனர். இதனையடுத்து இந்த மாணவிக்கு உதவ பலரும் முன்வந்து மாணவியின் வங்கிக்கணக்கிற்கு பணத்தை அனுப்பி வந்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்த செய்தியை கேள்விப்பட்ட நடிகர் சிவகார்த்திகேயன், சஹானா மருத்துவம் உள்ளிட்ட எந்த படிப்பு படிக்க விருப்பப்பட்டாலும், அந்த படிப்புக்குரிய அத்தனை செலவையும் தான் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார். இதனையடுத்து சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே சமீபத்தில் காலமான விவசாயி நெல் ஜெயராமன் மகனின் கல்வி செலவை சிவகார்திகேயன் ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

மரக்கூண்டில் இரண்டு குழந்தைகளை அடைத்து வைத்த இரக்கமில்லா பெற்றோர் கைது!

பெற்ற குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பாதுகாப்பாக வளர்க்கும் பெற்றோர்கள் மத்தியில் ஒருசில பெற்றோர்கள் பெற்ற குழந்தைகளை கொடுமைப்படுத்தும் செய்திகள் தற்போது அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கின்றது

ஓய்வு பெற்று 6 வருடம் ஆகியும் குறையாத மதிப்பு: அதுதான் சச்சின்!

கிரிக்கெட் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்தாரா? அறிக்கை கேட்கும் தேர்தல் அதிகாரி

கடந்த 18ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்றபோது நடிகர் ஸ்ரீகாந்த் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்க முதலில் அனுமதிக்கப்படவில்லை.

விபத்தில் காயமடைந்த ஊழியரை நேரில் சென்று நலம் விசாரித்த விஜய்!

நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் எந்த அளவுக்கு நெருக்கமாக இருந்து வருகிறார் என்பது பல சம்பவங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

டிக் டாக் தடை சரியா? நடிகை கஸ்தூரி கருத்து

டிக்டாக் செயலியை தடை செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் இந்த வழக்கை மதுரை உயர் நீதிமன்றக் கிளை வரும் ஏப்ரல் 24க்குள் தீர்ப்பளித்து முடிக்க வேண்டும்