சென்னை வெள்ளம்.. சிவகார்த்திகேயன் செய்த உதவி குறித்து உதயநிதியின் பதிவு,..!

  • IndiaGlitz, [Monday,December 11 2023]

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து ஏற்பட்ட வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது சென்னை படிப்படியாக மீண்டு வந்தாலும் இன்னும் சில இடங்களில் பொதுமக்கள் அவதியில் தான் இருக்கின்றனர்.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி மற்றும் மீட்பு பணிகளை செய்து வருகிறது. அது மட்டுமின்றி தொழில் அதிபர்கள் திரையுலக பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை நிவாரண நிதியாக தமிழக அரசு அளித்து வருகின்றனர்.

இந்த இலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழக அரசின் நிவாரண நிதிக்காக 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இது குறித்து உதயநிதி தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

மிக்ஜாம் புயல் – கன மழையைத் தொடர்ந்து கழக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. நம் அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள் – இயக்கங்கள் - தனிநபர்கள் என பலரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நம்மை சந்தித்த போது, நடிகர் – சகோதரர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நம்மிடம் வழங்கினார். அவருக்கு அன்பும் - நன்றியும். ஒன்றிணைந்து செயல்படுவோம் - இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட துயர் துடைப்போம்!

More News

பூர்ணிமாவின் உடலை வர்ணிக்கும் நிக்சன்.. வினுஷா மேட்டரில் இருந்து பாடம் கற்கவில்லையா?

 பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான நிக்சன் ஏற்கனவே வினுஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி கடும் கண்டனத்தை பெற்றார். அவரது அங்க  அவயங்களை அவர் தரக்குறைவாக பேசியது

தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி: நெகிழ்ச்சி வீடியோ..!

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

2026ல் நீங்கள் தான் முதல்வர் என எனது மனைவி கூறினார்: பிரபல நடிகர் பேச்சு..!

 2026 ஆம் ஆண்டு நான் தான் முதல்வர் என எனது மனைவியை கூறியதாக பிரபல நடிகர் ஒருவர் தனது கட்சி கூட்டத்தில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

என் கூட ரிலேஷன்ஷிப்பில் இருப்பியா? பெண் போட்டியாளரிடம் கேட்டாரா விஷ்ணு? வைரல் வீடியோ..!

என்னுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பியா? என்று விஷ்ணு கேட்டதாக பெண் போட்டியாளர் ஒருவர் சக போட்டியாளர்களிடம் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

நீங்கள் கேப்டனாக இருக்கவே தகுதி இல்லாதவர்ன்னு அர்த்தம்.. வறுத்தெடுத்த கமல்ஹாசன்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கியதில் இருந்து இந்த வாரம்தான் கமல்ஹாசன் கிட்டத்தட்ட போட்டியாளர்கள் அனைவரையுமே வறுத்தெடுத்தார் என்பதை பார்த்தோம்.