சிவகார்த்திகேயனுக்கு ட்ராமாவில் ஈடுபாடு அதிகம்..... என் வெற்றிக்குப் இருப்பது கமல்..... கிரேஸி மோகன்
- IndiaGlitz, [Wednesday,October 02 2024]
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர். இவர் வசனத்திற்காகவே ஓடிய திரைப்படங்கள் ஏராளம். நகைச்சுவை இவருக்கு இயல்பிலேயே தாராளம். மைக்கில் மதன காமராஜன், அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம் போன்ற படங்கள் முழுக்க முழுக்க இவர் வசனத்தில் வெளிவந்த வெற்றித்திரப்படங்கள்.
நடிகர் சிவாஜிக்கு டிராமாவில் ஈடுபாடு அதிகம். என் வெற்றிக்கு முழு காரணம் கமல்ஹாசன்தான் என வசன கர்த்தாவும், நடிகருமான கிரேஸி மோகன் பேசியுள்ளார். மேலும் அவர் என்ன பேசியுள்ளார் என பார்க்கலாம்....
சுஜாதாவின் கதைகள் படமாக வெளிவரத்தொடங்கியது. காயத்ரி, நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களை உதாரணமா சொல்லலாம். சுஜாதாவுக்கு அது ரொம்ப சந்தோசம். கதை, டிராமா அதன்பிறகு சினிமா அதுதான் ரூட்டும். இந்த ரூட்ல போனா நீங்க தோல்வி அடைய மாட்டீர்கள்.
தங்கப்பதக்கம் டிராமாவாக போடப்பட்டது. அதன்பின் அது சினிமா வெளிவந்தது. டிராமாவிலும் சிவாஜி நடித்திருந்தார். அந்தப் வெற்றிப்படம். டிராமாவில் எல்லோருக்கும் ஈடுபாடு வேண்டும்.
சிவகார்த்திகேயனுக்கு டிராமாவில் ஈடுபாடு உண்டு. அவர் என்னுடைய டிராமாக்களுக்கு வந்துள்ளார். அதுதான் அவருடைய வெற்றிக்கு காரணம் என்பேன்.
என்னுடைய வெற்றிக்கு முழு காரணம் கமல் சார்தான். அவரோடு 20 படங்களுக்கு மேல் பயணித்துள்ளேன். என்னக்கு குழந்தையைபோல் பாவிப்பவர்.
கமல்சார் தன்னை சிவாஜி பாதி, நாகேஷ் பாதி என்று சொல்லிக்கொள்வார். கமல் சார் போல் ரசிக்கும் தன்மை வேண்டும். அதனால்தான் என்னால் இப்படி வசனங்கள் எழுத முடிந்தது.
Humor is a serious business, முதலில் உங்கள் காமெடியை நீங்கள் ரசித்தால் மட்டுமே ரசிகர்களை ரசிக்க வைக்க முடியும்.
அபூர்வ சகோதரர்கள் படத்துல, திருக்குறள் கூட தம்மாதுண்டு ஆனா அதுல எவ்ளோ விஷயம் இருக்குனு நான் எழுதியதபார்த்து கமல் சார் என்ன கட்டிபிடிச்சிட்டார்.
கமல்சார் சொல்லுவாரு, ஊர்வசி நடிப்புல ராட்சசினு. மகளிர் மட்டும் படத்துல நான் அவங்களுக்கு சொல்லிகுடுக்குற வசனத்தை மெருகேத்துவாங்க.
இவ்வாறு கிரேஸி மோகன் ஜோவியலாக இந்த போட்டியில் பேசியுள்ளார்.