தனுஷூக்கு விருது கிடைக்கும் என சிலமணி நேரங்களுக்கு முன்பே கணித்த சிவகார்த்திகேயன்!

  • IndiaGlitz, [Tuesday,March 23 2021]

நடிகர் தனுசுக்கு ’அசுரன்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகமே அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறது

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு முன்பு ஒரு சில மணி நேரங்களுக்கு முன் தனுஷ்க்கு அசுரன் படத்திற்காக தேசிய விருது கிடைக்கும் என நடிகர் சிவகார்த்திகேயன் கணித்து உள்ளார்.

முன்னணி ஊடகம் ஒன்று தனது ட்வீட்டரில் இன்று அறிவிக்கப்படும் தேசிய விருதில் யாருக்கு விருது கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்? என்று டுவிட் ஒன்றை பதிவு செய்தது. அந்த டுவிட்டுக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் ’அசுரன்’ படத்தில் தனுசுக்கு விருது கிடைக்கும் என்று கூறியிருந்தார்

அவர் கணித்தது போலவே அடுத்த சில நிமிடங்களில் தேசிய விருது அறிவிப்பு வந்தபோது ’அசுரன்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தனுஷூக்கு தேசிய விருது என அறிவிக்கப்பட்டது. தனுஷுக்கு தேசிய விருது கிடைக்கும் என முன்கூட்டியே கணித்து இருந்த சிவகார்த்திகேயனுக்கும் தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 

More News

'என்னை அம்மாவா பாத்திங்கன்னா என் இதயத்தில் இடம் இருக்கும்: 'தலைவி' டிரைலர்

இயக்குனர் விஜய் இயக்கத்தில் அரவிந்தசாமி, கங்கனா ரனாவத் நடிப்பில், ஜி வி பிரகாஷ் இசையில் உருவாகிய 'தலைவி' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

டி.இமானை வாழ்த்தும் ஆஸ்கர் நாயகன்… என்ன சொன்னார் தெரியுமா?

கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த விருது பட்டியலில் அதிகளவு தமிழ் பெயர்கள் இடம் பிடித்து இருப்பது மிகவும் பெருமையாகப் பார்க்கப்படுகிறது.

தனுஷ், விஜய்சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்த முக ஸ்டாலின்!

நேற்று 67 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன என்பதும் அதில் தமிழ் திரைப்படங்கள் பல விருதுகளை அள்ளியது என்பதும் குறிப்பிடத்தக்கது. அசுரன் படத்தில் சிறப்பாக நடித்த தனுசுக்கு சிறந்த நடிகருக்கான விருது

'அசுரன்' தேசிய விருது: நன்றி தெரிவித்து தனுஷ் எழுதிய கடிதம்!

நேற்று 67 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 'அசுரன்' படத்தில் சிறப்பாக நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது

தனுஷின் 'ஜகமே தந்திரம்' ரன்னிங் டைம் எவ்வளவு?

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜகமே தந்திரம்'. இந்த திரைப்படம் விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது