close
Choose your channels

பாடல் கம்போஸிங் செய்யும்போது சிவகார்த்திகேயன் ஐடியா தருவார்: பிரபல இசையமைப்பாளர்!

Tuesday, May 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாடல் கம்போஸிங் செய்யும்போது சிவகார்த்திகேயன் தனக்கு ஐடியா தருவார் என பிரபல இசையமைப்பாளர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் நடித்து வரும் அடுத்த திரைப்படம் ’எஸ்கே 20’. பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பதும் இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே வெளிநாட்டில் படமாக்க பட வேண்டிய நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த படத்தில் 4 பாடல்கள் இடம் பெற்றிருப்பதாகவும் அதில் மூன்று பாடல்களை கம்போஸிங் நிறைவடைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பாடல் கம்போஸிங்கின்போது சிவகார்த்திகெயன் தனது ஆலோசனைகளை தருவார் என்றும் கூறினார்.

மேலும் பாடல் கம்போஸிங்கின்போது இடைவெளியில் நானும் சிவகார்த்திகேயனும் கிரிக்கெட் விளையாடுவோம் என்றும், மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதி உள்ளதாகவும் அந்த பேட்டியில் தமன் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment