என் தாய்க்கு சமர்ப்பணம்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

  • IndiaGlitz, [Saturday,February 20 2021]

தமிழக அரசு நேற்று கலைமாமணி விருது குறித்த பட்டியலை வெளியிட்டது என்பதும் அந்த பட்டியலில் நடிகர் சிவகார்த்திகேயன் பெயர் இருந்தது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் இன்று கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது கையால் விருதுகளை வழங்கினார். அந்த வகையில் கலைமாமணி விருதை தமிழக முதல்வரிடம் இருந்து பெற்ற நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் நெகழ்ச்சியுடன் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:

சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும், இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி. தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம்’ என்று தனது தாயாருக்கு கலைமாமணி விருதை சமர்ப்பிக்கும் வகையில் பதிவு செய்துள்ளார். மேலும் தனது தாயாரிடம் கலைமாமணி விருதை அளித்து அவருடைய காலில் விழுந்து ஆசி வாங்கும் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கலைமாமணி பட்டத்தை தமிழக முதல்வரிடம் இருந்து பெற்ற சிவகார்த்திகேயனுக்கு சக திரையுலக கலைஞர்களும் ஏராளமான ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மாகாபாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரல் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்!

விஜய் டிவி ஆங்கரான மாகாபா ஆனந்த் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து மாகாபாவிற்கு இவ்வளவு பெரிய மகனா?

ஷிவானியை நிம்மதியா இருக்க விடுங்கள்: மனைவியை விவாகரத்து செய்த அஸீம் பதிவு!

https://tamil.behindtalkies.com/vijay-tv-serial-actor-azeem-opens-about-relationship-with-shivani/

மெட்ரோ ரயில் கட்டணத்தை அதிரடியாகக் குறைத்த தமிழக முதல்வர்!

கடந்த 5 ஆண்டுகளாக சென்னை மெட்ரோ ரயில் திட்டம் சிறப்பான முறையில் இயங்கி வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் கட்டணம் அதிகமாக இருக்கிறது எனப் பொதுமக்கள்

நவீன 1100 செல்போன் குறைதீர் திட்டம்… 60 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டதாக முதல்வர் தகவல்!

முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டத்தின் கீழ் 1100 இலவச செல்போன் குறைதீர் திட்டத்தை தமிழக முதல்வர் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவக்கி வைத்தார்

'கே.ஜி.எஃப் 2' தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற முன்னணி நிறுவனம்!

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த 'கேஜிஎப்' திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது.