சிவகார்த்திகேயனின் முதல் பட டைட்டில் அறிவிப்பு தேதி

  • IndiaGlitz, [Sunday,May 13 2018]

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் மிகக்குறுகிய காலத்தில் இடம்பிடித்த நடிகர் சிவகார்த்திகேயன். அவருடைய படங்களுக்கு நல்ல ஓப்பனிங் கிடைப்பதால் போட்டி போட்டி வியாபாரம் ஆகின்றது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் 'சீமராஜா' என்ற படத்தில் நடித்து வருகிறார். சமந்தா நாயகியாக நடித்துள்ள இந்த படம் வரும் விநாயகர் சதூர்த்தி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் விரைவில் எம்.ராஜேஷ் இயக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் திரைப்படத்தை அருண்காமராஜ் இயக்கவுள்ளார் என்பதும், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் நாளை மறுநாள் அதாவது மே 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு சிவகார்த்திகேயனின் சமூக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது.

More News

இயக்குனர் பாரதிராஜா மீது வழக்குப்பதிவு! காரணம் என்ன தெரியுமா?

கடந்த சில வாரங்களாகவே காவிரி பிரச்சனை, ஐபிஎல் போட்டி எதிர்ப்பு, ரஜினி எதிர்ப்பு உள்பட பல விஷயங்களுக்காக தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருபவர் இயக்குனர் பாரதிராஜா.

ரஜினியால் நிரப்ப முடியும் ஒரே வெற்றிடம் இதுதான்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவினாலும், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலக்குறைவாலும் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தன்னால் நிரப்ப முடியும்

விரலை காண்பித்தால் தோசை-காபி: கர்நாடக தேர்தலில் வித்தியாசமான முயற்சி

கர்நாடகாவில் இன்று சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவை அதிகரிக்க தனியார் அமைப்புகள் வாக்களித்தவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கி வருகின்றன

ஓடும் ஷேர் ஆட்டோவில் இருந்து குதித்த சென்னை கல்லூரி மாணவி: 

சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது ஆட்டோ டிரைவரும் அவருடைய நண்பரும் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததால்

கர்நாடக தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் முடிவு

கர்நாடக மாநிலத்தில் இன்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 70% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு