முடிவுக்கு வந்தது சிவகார்த்திகேயனின் முதல் படம்

  • IndiaGlitz, [Tuesday,July 17 2018]

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கிய 'சீமராஜா' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது என்பதும் தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து கொண்டிருக்கும் இந்த படம் வரும் ஆயுதபூஜை தினத்தில் வெளிவரவுள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படமான 'கனா' திரைப்படத்தின் படப்பிடிப்பும் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் மிகக்குறுகிய இடைவெளியில் சிவகார்த்திகேயனின் இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றுடன் 'கனா' படத்தின் படப்பிடிப்பு முடிவு பெற்றதை அடுத்து இன்று இரவு இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'கனா' படத்திற்காக இரவுபகலாக பணிபுரிந்த அனைத்து கலைஞர்களுக்கும் தயாரிப்பாளர் என்ற முறையில் இந்த விழாவில் சிவகார்த்திகேயன் தனது நன்றியை தெரிவிக்கவுள்ளார்.

அருண்காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கனா' படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் அப்பா-மகளாக நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிகர் தர்ஷன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், திபு நினன் தாமஸ் இசையில், இளையராஜா கலையில் உருவாகும் இந்த படத்தை ஆண்டனி எல் ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார்.